53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு: இனிமேல் டூப்ளிகேட் லைசன்ஸ் எடுக்க முடியாது!.
ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமம் இணைக்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய சட்டம் மற்றும் தகவல்தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் மத்திய சட்ட மற்றும் தகவல்தொழில்நுட்பவியல் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டார். அதில் அவர் பேசுகையில், ஆதார் எண் திட்டம் கொண்டு வரப்பட்டதால் மக்களுக்கு பல பயன்கள் ஏற்பட்டுள்ளன. விரைவில் ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுனர் உரிமத்தை இணைப்பதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது.
தற்போது விபத்துக்களை ஏற்படுத்தும் நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விடுகிறார்கள். இதைத் தொடர்ந்து மாற்று ஓட்டுநர் உரிமத்தையும் அவர்கள் பெற்று விடுகிறார்கள். இதனால் தண்டனையில் இருந்து எளிதில் தப்பி விடுகிறார்கள்.
இந்த மோசடிகளை தடுக்க ஆதார் எண்ணுடன், ஓட்டுநர் உரிமம் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என கூறினார்.