35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
இனி ரயில்வே ஊழியர்களுக்கான தேர்வை ரயில்வே வாரியம் நடத்தாது!
இந்திய ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுவரை ரயில்வே வாரியமே தேர்வுகள் மூலம் ஊழியர்களை தேர்வு செய்து வந்தது. இனி ரயில்வே ஊழியர்கள் மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் தங்களின் முதன்மைத் தேர்வு எழுதி முடித்ததும், அவர்கள் ஐ.ஆர்.எம்.எஸ். உள்பட எந்த நிறுவனத்தில் சேர விரும்புகிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும். இந்த பணியாளர் தேர்வுக்கான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
ரயில்வேயில் 35 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ள அதிகாரிகளே இனிமேல் ரயில்வே வாரிய தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவார்கள் என்றும் இதற்கான நடவடிக்கைகள் முடியும் வரை அனைத்து அதிகாரிகளும் தற்போது பார்க்கும் பணியிலேயே தொடரலாம் என்றும் இதனால் எந்த ஒரு ஊழியருக்கும் பணிமூப்பு உள்பட எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்.