மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமானதை மறைத்து... 17 வயது மாணவியை திருமணம் செய்த ஆசிரியர்..!!
ஆந்திர பிரதேசத்தில், திருமணமாகி குழந்தை உள்ளதை மறைத்து, பிளஸ் 2 மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் கங்காவரம் மண்டல பகுதியில் வசிப்பவர் சலபதி (33). இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை பேசி அவரை வசப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து காவல் துணை ஆய்வாளர் சுதாகர் ரெட்டி கூறும்போது, அந்த மாணவிக்கு கடந்த புதன்கிழமை இறுதி தேர்வுகள் நடந்துள்ளன.
தேர்வு முடிந்தவுடன், மாணவியிடம் பல பொய்களை கூறி திருப்பதிக்கு அந்த மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அந்த மாணவியிடம் நான் நேர்மையானவன் என்று கூறியதுடன், தன்னை நம்பும்மாறு கூறியுள்ளார். உன்னை நன்றாக கவனித்து கொள்வேன் என்று அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.
அதன்பின் இருவரும் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு ஆசிரியரின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாறுதலை கவனித்த மாணவி நடந்த விஷயம் அனைத்தையும் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன்பின்னர், மாணவியின் பெற்றோர் மற்றும் அந்த மாணவி கங்காவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சலபதியை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். இதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.