மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோர விபத்து.. அரசு பேருந்து மோதி காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் பலி..!
கர்நாடக மாநிலம் உத்திர கன்னடா பகுதியில் குமட்டாவை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது. அதே நேரத்தில் குமட்டாவிலிருந்து சிர்சியை நோக்கி கார் ஒன்றும் வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது சிர்சி தாலுகாவில் உள்ள பந்தலா பகுதியில் காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். இதனையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்தில் பலியானவர்கள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தட்சிண கனடா மாவட்டம் புத்துரை சேர்ந்து 4 பேர் என்பதும், ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.