பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
வெறும் 300 ரூபாய் கட்டணம் செலுத்தாத நோயாளியை அடித்தே கொன்ற மருத்துவமனை ஊழியர்கள்.! பதறவைக்கும் சம்பவம்.!
300 ரூபாய் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக நோயாளியை மருத்துவமனை ஊழியர்கள் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் என்ற பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் நபர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்தபோது மருத்துவக்கட்டணமாக நான்கு ஆயிரம் செலுத்துமாறு மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த நான்கு ஆயிரம் ரூபாயில், 300 ரூபாய் என்ட்ரி கட்டணமாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்,அந்த 300 ரூபாயை கட்ட முடியாது, மீதமுள்ள 3700 ரூபாய்யை காட்டுவதாக நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இருதரப்பினருக்கும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளியையும், அவரது உறவினர்களையும் கம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நோயாளி உயிரிழந்ததாகவும், மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.