மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடுதி இயக்குநர் ஆபாசபடங்களை பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார்!.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் விடுதி இயக்குனர் தன்னை வலுக்கட்டாயமாக ஆபாசபடங்களை பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள விடுதியில் பேசமுடியாத, வாய்பேசமுடியாத 20 வயது இளம்பெண் கடந்த வாரம் காவல்துறையில் பாலியல் புகார் அளித்திருந்தார்.
இதே போன்று அடுத்தடுத்த 2 நாள்களில் மேலும் 2 பெண்கள் புகார் அளித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த வாரம் மற்றொரு இளம்பெண் புகார் அளித்ததால், விடுதியின் இயக்குநரை போலீசார் கைது செய்தனர்.
கடத்த வரம் அந்த பெண் இந்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், விடுதியின் இயக்குனர் அவத்புரி நகரில் உள்ள வீட்டில் தன்னை அடைத்து வைத்து, வலுக்கட்டாயமாக ஆபாசப் படங்களை பார்க்க வைத்ததாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்த தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.