மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டு வேலைக்கு சென்ற 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!
நாக்பூரில் வீட்டு வேலைக்கு சென்ற 12 வயது சிறுமியை வீட்டுக்குள் அடைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அதர்வ நகரி பகுதியில் வசித்த குடும்பத்தினர் ஒருவர் பெங்களூருவில் இருந்து 12 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்துள்ளனர். அந்த சிறுமியை வீட்டுக்குள் அடைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
அதன்படி சிறுமி வீட்டு வேலை செய்யும் போது தவறு செய்ததாக கூறி அடிக்கடி சிறுமியின் உடலில் கரண்டி மற்றும் சிகரெட்டால் சூடு வைத்து உடல் முழுவதும் காயப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் அந்த குடும்பத்தினர் பெங்களூர் சென்ற போது சிறுமியை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளனர். அடைக்கப்பட்ட வீட்டில் இருந்த சிறுமி பசி பட்டினியால் பாதிக்கப்பட்டு ஜன்னல் வழியாக அக்கம் பக்கத்தினரின் உதவிக்கு அழைத்துள்ளார். இதனையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.