திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தாய்மையடையவில்லை என கூறி மனைவியிடம் கொடூரமாக நடந்த கணவன்!. அதிர்ச்சி சம்பவம்!.
உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவியை 2-வது மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதனை பார்த்த பக்கத்து வீட்டார் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கீழே விழுந்து காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன் மாடியில் இருந்து கீழே தள்ளியதால் கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அந்த பெண்ணிற்கு. இந்த நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து குற்றவாளியை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் சோதனை செய்யும் போது, 4 கைதுப்பாக்கிகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், பல மாதங்களாக மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததும், நான்கு வருடங்களாக தாய்மை அடையாததிற்காகவும் கொடுமை படுத்தியது தெரியவந்தது.
மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று துப்பாக்கியை கொண்டு மிரட்டியுள்ளார். பின்னர் மனைவியை அடித்து ஜன்னல் வழியாக வெளியில் தள்ளிவிவிட்டதாக கூறியுள்ளார்.