திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவியின் நாக்கை அறுத்து வீட்டிற்குள் பூட்டி வைத்து கணவன் செய்த கொடூரம்: அதிர்ச்சி காரணம்!.
உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் திருமணமானதில் இருந்து தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திட்டு வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அவரது மனைவிக்கும், ஆகாஷுக்கும் இடையே கடந்த வாரம் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஆத்திரமடைந்த ஆகாஷ், தன்னை எதிர்த்துப் பேசியதாக மனைவியின் நாக்கை வெட்டியுள்ளார்.
இந்த சம்பவம் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவரின் மனைவியை வீட்டில் வைத்துப் பூட்டியுள்ளார். ஒருவழியாக ஆகாஷிடம் இருந்து தப்பி வந்த அவரது மனைவி தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி பெற்றோர் வீட்டில் கூறியுள்ளார்.
இதனையடுத்து இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆகாஷின் தந்தை போலீஸ் அதிகாரி என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருந்துள்ளனர்.
இதனால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.