#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கற்புக்கரசியா நீ? நிரூபி... கணவனின் கேவலமான எண்ணத்தால், வெதும்பிப்போன மனைவியின் கைகள்.. பதறவைக்கும் சோகம்.!
சீதையை போல கற்புக்கரசி என நிரூபிக்குமாறு மனைவியின் கையில் கற்பூரம் ஏற்றிய கணவர் மீது வழக்குப்பதிந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம், வேம்கல் காவல்துறை எல்லைக்கு உட்பட்ட வீரனஹள்ளி வசித்து வருபவர் ஆனந்த். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடந்த நிலையில், சில மாதங்களாக தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக ஆனந்த், 'எனக்கு உன் நடத்தையின் மீது சந்தேகமாக உள்ளது. எனவே, நீ என் சந்தேகத்தை போக்க, உனது கையில் கற்பூரம் ஏற்றி சீதையை போன்று கற்புக்கரசி என நிரூபிக்க வேண்டும்'. என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆனந்தின் மனைவியும் தனது கணவரிடம் தன்னைக் குறித்து நிரூபிக்க உள்ளங்கையில் கற்பூரத்தை ஏற்றிய நிலையில், அவரது கை முழுவதும் தீ பரவி எரிந்துள்ளது. இதனால் அவரது கை கருகிய நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லக்கூட ஆனந்த் விரும்பவில்லை.
பின் அருகிலிருந்த சமூக ஆர்வலர் ஒருவர் ஆனந்தின் மனைவியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, தலைமறைவான ஆனந்தை தேடி வருகின்றனர்.