மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான சில தினங்களிலே மனைவி செய்த செயலால் உயிரை விட்ட கணவன்!.
ஹைதராபாத்தில் நவீன் என்ற இளைஞரும், இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணம் செய்துகொண்டதால் இவர்களின் வாழ்கை ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.
திருமணமான சில நாட்களில் இருவருக்கும் இடையே குடும்பத்தில் வழக்கமாக இருக்கும் சின்ன சின்ன சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த பெண் நவீனை பிரிந்து தனியாக வாழ விரும்புவதாக கூறியுள்ளார்.
மனைவி மீது அதிக அளவு காதல் கொண்ட நவீன் அவர் மனைவியை எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர் நவீனை விட்டு தனியாக சென்றுள்ளார்.
இதனால் மனவேதனையில் இருந்த நவீன், சம்பவத்தன்று தனது தாயிடம், ஏன் அவள் இப்படி செய்தாள், என்னை விட்டு போய்விட்டாளே. அவளை பிரிந்து என்னால் இருக்கமுடியவில்லை என புலம்பியுள்ளார்.
இதனையடுத்து காலையில் நவீனின் அம்மா அவர் அறைக்கு சென்ற போது அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து கதறி அழுத நவீனின் தாய் காவல்துறையில் தனது மகனின் சாவுக்கு அவர் மனைவி தான் காரணம் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.