#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நிறைமாத கர்ப்பிணி என்றுகூட பாராமல் வீட்டிலிருந்த கணவர் அரங்கேற்றிய கொடூரம்! அதிர்ச்சியூட்டும் பகீர் சம்பவம்!
பஞ்சாப் மாநிலம் பட்டியாலா பகுதியில் வசித்து வருபவர் கங்காகுமார். இவரது மனைவி சரோஜ். 21 வயது நிறைந்த அவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கங்கா குமார் தினக்கூலி தொழிலாளராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வருமானமின்றி பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு, பெரும் நெருக்கடியில் இருந்துவந்த நிலையில் கங்காகுமார் மற்றும் சரோஜ் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவ்வாறு நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கங்காகுமார் நிறைமாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல், தனது மனைவியை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சரோஜை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சரோஜ் மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை இருவரும் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வழக்குபதிவு செய்த போலீசார் கங்காகுமாரை தீவிரமாக தேடி வந்தநிலையில் அங்குள்ள ஆற்றின் அருகே அவரது பைக் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் அவர் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாமோ என்ற சந்தேகத்துடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் அவரது சடலம் கிடைத்தால் மட்டுமே அது உறுதி செய்யப்படும் என போலீசார் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.