திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவியின் தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த கணவர்: நடத்தை சந்தேகத்தால் விபரீதம்.!
ஒடிசா மாநிலத்தில் உள்ள நயாகர்க் மாவட்டம் பிடாபாஜி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன் பாஹா (வயது 37). இவரின் மனைவி தரித்ரி (வயது 30). கணவன் - மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கணவருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே பிரச்சனை நடந்த நிலையில், ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவியின் தலையை ஒரே துண்டாக வெட்டி அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று விஷயத்தை கூறி சரணடைந்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ந்துபோன அதிகாரிகள் பெண்ணின் தலை மற்றும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து அர்ஜுனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.