மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவரை வீட்டில் சேர்க்காத மனைவி! திடீரென நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்! விசாரணையில் வெளியான பகீர் தகவல்!
கொல்கத்தாவில் வசித்து வந்தவர் மகாபுல் அலி. இவரது மனைவி கொரோசா பேகம். இவர்களுக்கு க்ரம் அலி என்ற 22 வயது மகனும், மஜி என்ற 13வயது மகளும் உள்ளனர். இந்நிலையில், மகாபுல் மற்றும் கொரோசாவிற்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்துகொண்டே இருந்துள்ளது. இதனால் கொரோசா கடந்த சில மாதங்களாக அவரது கணவரை வீட்டில் சேர்க்காமல் இருந்துள்ளார். மேலும் மகன் மற்றும் மகளுடன் மட்டும் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை கொரோசா வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மூவரின் உடலிலும் தீப்பற்றி எரிந்துள்ளது. பின்னர் தீயை அனைத்து கொரோசா மற்றும் அவரது பிள்ளைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், அக்ரம் அலி மற்றும் அவரது தாய் கொரோசா ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். மகள் மஜி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மதுபோதைக்கு அடிமையான மக்புல் அலி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே திருமணமாகி மகன், மகளுடன் வசித்துவந்த கொரோசா பேகத்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு அழைத்து வந்தார். இந்நிலையில் அவர் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், வேலைக்கு செல்லாமல் மனைவி மீது சந்தேகப்பட்டுகொண்டும் இருந்துள்ளார்.
இந்நிலையிலேயே அவர் தனது கணவரை வீட்டில் சேர்க்காமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த மகாபுல் அலி மீண்டும் சமீபத்தில் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஜன்னல் வழியாக 3 பேரின் மீதும் பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து விட்டு தப்பியோடியுள்ளார் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.