மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோழிக்கறி சமைத்து கொடுக்காததால் மனைவியை குத்திக் கொன்ற கணவன்.!
உத்திர பிரதேசத்தில் கோழிக்கறி சமைத்து தராததால் மனைவியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஜியாபாத் பிரேம் நகரை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவருக்கு நூர் பானே என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மனைவியிடம் கோழிக்கறியை பொறித்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் மனைவி மறுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த கணவன் தனது மனைவியின் கழுத்தில் கத்திக்கோலால் குத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த மனைவி ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த கணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.