திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆன்லைனில் வேலை தேடி நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
வேலையை இழந்த இளம்பெண்
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 29 வயதான இளம் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த இளம் பெண் திடீரென வேலையை இழந்துள்ளார். இதனையடுத்து புதிய வேலையை தேடி வந்துள்ளார்.
சமூக வலைதள பழக்கம்
இந்த நிலையில் அந்த இளம் பெண் சமூக வலைதளத்தில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவரிடம் தன்னை பற்றி கூறியுள்ளார். இதனையடுத்து அந்த நபர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ஹைதராபாத் வரவேண்டும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அதிவேகத்தில் காரை இயக்கிய 19 வயது இளைஞர்; விபத்தில் அப்பளம் போல நொறுங்கிய கார்.. பரிதாப பலி.!
நம்பிச்சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
அந்த முகம் தெரியாத நபரை நம்பி அந்த பெண்ணும் ஹைதராபாத் சென்றுள்ளார். அப்போது அவர் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
காவல்நிலையத்தில் புகார்
இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றன.
இதையும் படிங்க: அடேங்கப்பா... ரூ.19.51 இலட்சம் கொடுத்து பேன்சி நம்பர் பிளேட் வாங்கிய நபர்; ரொம்ப ராசியான நம்பர் போல.!