மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொலையில் முடிந்த சந்தேகம்... 2 உயிர்களை காவு வாங்கிய கோபம்... காவல்துறை விசாரணை.!
தெலுங்கானா மாநிலத்தில் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு சரணடையச் சென்ற கணவர் லாரி மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள பங்கர்குடா பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கும் தீபா என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனைத் தொடர்ந்து அருண்குமார் மற்றும் தீபா ஆகிய இருவரும் அருண்குமாரின் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்திருக்கிறது. அருண்குமார் தனது மனைவி தீபா மீது சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி துன்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தீபா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அருண்குமாரின் தாயார் தீபாவை சமாதானப்படுத்தி தனது வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.
அப்போது மீண்டும் தீபா மற்றும் அருண்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிந்திருக்கிறது. இதில் ஆத்திரம் அடைந்த அருண்குமார் தனது மனைவியின் தலையை சுவற்றில் அடித்து பின்னர் அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தீபா இறந்ததை உறுதிப்படுத்தி விட்டு காவல் நிலையத்தில் சரண் அடைவதற்காக வேகமாக சென்றவர் எதிரே வந்த லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீபா மற்றும் அருண்குமார் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.