"அதனால" ரத்தமா கொட்டுச்சு.. மனைவியிடம் இருந்து என்னை யாராவது காப்பாத்துங்க - பிரதமர் அலுவலகத்திற்கு பரபரப்பு புகாரளித்து அப்பாவி கணவன் கதறல்..!!



husband tweet about protect me my wife

மனைவி தன்னை தாக்கியதால் ரத்தமாக கொட்டியது என கணவன் பிரதமர் அலுவலகத்திற்கு பரபரப்பு புகாரளித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்தவர் யதுநந்தன் ஆச்சார்யா. இவர் சமூக ஊடகங்கள் மூலமாக தனது குறைகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிவந்த நிலையில், தனது ட்வீட்டை பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி மற்றும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ ஆகியோருக்கும் தெரிவித்துள்ளார். 

இது குறித்து யதுநந்தன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு யாராவது உதவுவார்களா? அல்லது இதுபோன்று யாருக்காவது நடந்ததுதான் உண்டா? நான் ஒரு சாதாரண மனிதன். என் மனைவி என்னை கத்தியால் தாங்கினாள். இதுதான் நரி சக்தியா? இதற்காக அவள் மீது குடும்ப வன்முறை வழக்கு போடலாமா? என்னை காப்பாற்றுங்கள். மனைவியால் கத்தியால் குத்தப்பட்டதில் தனது கையில் இருந்து ரத்தம் கொட்டியது என அவர் புகாரளித்துள்ளார். 

banglore

இதனை தொடர்ந்து அவரது ட்வீட்டிற்கு பதிலளித்த பெங்களூர் காவல்துறை கமிஷனர் பிரதாப் ரெட்டி காவல்நிலையத்திற்கு சென்று சட்டபூர்வமாக புகார் கொடுக்குமாறும், குறைகளை நிவர்த்தி செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் யதுநந்தன் ஆச்சாரியார் பல்வேறு பிரிவுகளின் ஆதரவுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.