மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவருக்கு விபத்து... ராணுவ வீரரின் மனைவியை ஏமாற்றி அழைத்துச் சென்று; பாலியல் பலாத்காரம் ...!!
ராணுவ வீரரின் மனைவியை ஏமாற்றி அழைத்துச் சென்று வீட்டு உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த ராணுவ வீரர் பணிக்காக சென்றுவிட்டதால், அவரது மனைவி மட்டும் தனியாக அந்த வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், அந்த பெண் தனியாக இருந்த நேரத்தில் அங்கு வந்த வீட்டின் உரிமையாளர் சோகன் சிங் ராணுவத்தில் பணியாற்றும் அந்த பெண்ணின் கணவர் விபத்தில் சிக்கிவிட்டதாக கூறியுள்ளார். எனவே உடனே கிளம்பி தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனே கிளம்பி சோகன் சிங்கின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது வீட்டில் வைத்து அந்த பெண்ணை சோகன் சிங் பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோன் என்று அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ராணுவ வீரரின் மனைவி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.