மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சனிக்கிழமையில் இருந்து வெளியே வராத குடும்பம்..! உள்ளே சென்று பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி.!
ஹைதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரதீப் (40) என்பவர் பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுவாதி (35) என்ற மனைவியும், கல்யாண் கிருஷ்ணா (6), ஜெய கிருஷ்ணா (2) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் பிரதீப்பின் வீடு பூட்டிய நிலையில் இருப்பதாகவும், வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை எனவும் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரதீப், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் படுக்கை அறையில் சடலமாக கிடந்துள்ளனர்.
பொருளாதார பிரச்சனை காரணமாக பிரதீப் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தான் உங்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை என இறப்பதற்கு முன் பிரதீப் தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் நால்வரின் மரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.