மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியின் கையை வெட்டி அதிரவைக்கும் காரணம் சொன்ன கணவன்.. பதறவைக்கும் பேரதிர்ச்சி தகவல்.. கதறிய மனைவி.!
மேற்கு வங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த கேதுகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ஷரீபுல். இவரது மனைவி ரேணு காதுன். இவர் தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ்ஸாக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் ரேணுவுக்கு கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் நர்ஸ்ஸாக சேருவதற்கு ஆர்டர் கிடைத்துள்ளது. இதுகுறித்து தன் கணவரிடம் தெரிவித்துள்ளார். கவர்மெண்ட் வேலை கிடைத்த செய்தி கணவருக்கு சந்தோஷத்தை தரும் என எதிர்பார்த்தவருக்கு, ஏமாற்றமே மிஞ்சியது.
ஷரீபுல் அவரை கவர்மெண்ட் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று செல்லியுள்ளார். ஆனால் ரேணு காதுன், கணவர் பேச்சைக் கேட்காமல் வேலைக்குச் செல்வதில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஷரீபுல் அவர் தூங்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து தலையணையால் அமுக்கி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கையை வெட்டியுள்ளார்.
துண்டான கையை இணைத்து ஆபரேஷன் செய்து விடுவார்களோ என நினைத்து துண்டான கையை ஒளித்து வைத்துள்ளார். ரேணுகா கதுன் அண்டை வீட்டார் மற்றும் அவரது சகோதரரால் துண்டிக்கப்பட்ட மணிக்கட்டுடன் அருகிலுள்ள கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லபட்டார்.அங்கிருந்து அவர் பர்த்வானில் உள்ள மற்றொரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்
உடனே மருத்துவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ரேணுகாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அவரது கணவர், ஷரிபுல், அவரது பெற்றோர் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் தேடத் தொடங்கினர். மனைவிக்கு கவர்மெண்ட் வேலை கிடைத்தால் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவார் என்ற சந்தேகத்தில் கவர்மெண்ட் வேலையி சேர்வதை தடுக்கவே அவரது கையை வெட்டியதாக விசாரணையில் கூறியுள்ளார்.