பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
முக கவசம் இல்லையேல், பெட்ரோல் இல்லை.! ஒடிசாவின் அதிரடி அறிவிப்பு..!
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே இந்நோயை கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த ஊரடங்கானது வரும் செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில் அடுத்ததாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர்களுடன் இன்று வீடியோ காலின் மூலம் ஆலோசனை செய்யவுள்ளார் பிரதமர் மோடி. ஆனால் மோடியின் அறிவிப்பு வருவதற்கு முன்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் அரசின் உத்தரவை கடைப்பிடிக்கும் வகையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 1600 பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோல் போட வரும் நபர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி அப்படி முககவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் போன்றவை போடப்படும் என்ற அதிரடி உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இதேபோல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மளிகை மற்றும் காய்கறி கடை உரிமையாளர்களும் முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.