மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடச் சீ.... மனுஷனா நீ.? நண்பர்களுடன் இணைந்து மனைவிக்கு பாலியல் தொல்லை... சகோதரர்கள் கைது.!
ஆந்திர மாநிலத்தில் நண்பர்களை போதை விருந்துக்கு அழைத்து அவர்களுடன் சேர்ந்து மனைவியை கொடுமைப்படுத்திய சம்பவத்தில் கணவர் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த அகிலேஷ் என்பவர் போதை விருந்திற்கு தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து இருக்கிறார். அப்போது அவர்களுடன் சேர்ந்து போதை மருந்துகளை பயன்படுத்தி தனது மனைவியை கொடுமை செய்துள்ளார்.
மேலும் அவரது நண்பர்களும் மனைவியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட போது அதற்கும் உறுதுணையாக இருந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி அகிலேஷ் மற்றும் அவரது சகோதரரை கைது செய்தனர்.
நாட்டில் போதை மருந்து கலாச்சாரம் தலை தூக்கி இருக்கும் நிலையில் ஐடி ஊழியர்கள் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவற்றை காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.