மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆந்திராவில் ஆசிட் தாக்குதல்... பெண் பரிதாப பலி... சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஆசிட் தாக்குதலுக்குள்ளான இளம் பெண் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகிறது விஜயவாடா காவல்துறை.
ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள எலூரைச் சேர்ந்தவர் பிரான்சிக்கா என்ற முப்பத்தி ஐந்து வயது பெண். இவர் அங்குள்ள பல் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் ராஜமுந்திரி பகுதியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
பிரான்சிக்கா தன்னுடைய பெற்றோருடன் வசித்து வரும் நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று பணி முடித்துவிட்டு தன்னுடைய வீட்டிற்கு திருப்பி கொண்டு இருந்திருக்கிறார். அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் இவர் மீது ஆசிட்டை வீசி தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் அவரது தலை,முகம், மார்பு போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலையில் சுருண்டு விழுந்து கதறி துடித்தார் பிரான்சிக்கா.
சம்பவ இடத்திலிருந்த பொதுமக்களும் அங்கு வந்த அவரது பெற்றோரும் பிரான்சிக்காவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த பிரான்சிக்கா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹன்சிகா மீது ஆசிட் வீசிய அவர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. மேலும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.