53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
தாய் இறந்த துக்கத்தில் மகளும் தற்கொலை; குடும்பத்தினருக்கு காத்திருந்த அடுத்தடுத்த அதிர்ச்சி.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிசிலி (வயது 82) இவரது மகள் டோரா ராஜப்பன். இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிசிலி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்த பெண்மணி தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மும்பையில் இருந்து பெங்களூர் வந்த டோரா ராஜப்பனின் சகோதரர் வீட்டின் கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை.
இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் கதவு உடைக்கப்பட்டு அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். அச்சமயம் தாய் மற்றும் மகள் சடலமாக இருந்துள்ளனர்.
82 வயதான மூதாட்டி உடல்நலகுறைவால் உயிரிழந்த நிலையில், தாய் இறந்த சோகத்தில் மகளும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.