"என் கூட படுக்கையை பகிர்ந்தால் டி.எஸ்.பி ஆக்குவேன்" - பெண் எஸ்.ஐ-க்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஎஸ்பி பணியிடைநீக்கம்.!



in Bihar DSP Faiz Ahmed Khan Suspended

 

வேலியே பயிரை மேயத்துணிந்தாற்போல, மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் அதிகாரியே, தனக்கு கீழ் வேலை பார்த்து வந்த பெண் எஸ்.ஐ-யை படுக்கைக்கு அழைத்த பயங்கரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள கைமூர் மாவட்டத்தில் டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் பயாஸ் அகமது கான். இவர் உத்தரபிரதேசம் - பீகார் மாநில எல்லையில் உள்ள மகானியா நகரில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்துள்ளார். 

அப்போது, தனது காவல் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் பெண்மணியை தன்னுடன் வந்து ஒரு இரவு படுக்கையை பகிர்ந்தால், டிஎஸ்பி ஆக்குகிறேன் என்று கூறியிருக்கிறார். 

இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி, கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்திருக்கிறார். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், டிஎஸ்பியாக பணியாற்றி வந்தவரும் பயாஸ், தனது அதிகாரம் மற்றும் பதவியை பயன்படுத்தி விசாரணையை தொடர்ந்து தள்ளிப் போட்டு வந்துள்ளார். 

இதனிடையே பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்றம் இந்த விஷயத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. 

தொடர்ந்து, பீகார் மாநில உள்துறை அமைச்சகம் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட டிஎஸ்பியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது. 

பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு டிஎஸ்பி நேரிலும், வாட்ஸப்பிலும் பாலியல் தொல்லைகள் கொடுத்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.