அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
டெல்லியில் வீடு புகுந்து சகோதரிகள் மீது துப்பாக்கிச் சூடு.... குற்றவாளி அளித்த பரபரப்பு வாக்குமூலம்.!
இந்திய தலைநகர் டெல்லியின் அம்பேத்கர் பாஸ்தி பகுதியில் இரண்டு இளம் பெண்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள அம்பேத்கர் பாஸ்தி எனும் பகுதியில் வசித்து வருபவர்கள் பிங்கி(30) மற்றும் ஜோதி (29) இவர்கள் இருவரும் சகோதரிகள். இந்நிலையில் இன்று காலை இவர்கள் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பிங்கி மற்றும் ஜோதி இருவரையும் துப்பாக்கியால் சுட்டார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது பிங்கி மற்றும் ஜோதி இருவரும் ரத்த வெள்ளத்தில் கடந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி குறைந்த பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் பிங்கி மற்றும் ஜோதியின் சகோதரரிடம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாகவும் அதன் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இது மட்டும் தான் காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.