திரைப்பட பாணியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்த காவல்துறை; பதறவைக்கும் காட்சிகள்.!



  Madhya Pradesh Narcotics Capture Drug Smuggling Gang Like Movie Scene  

911 கிலோ அளவிலான போதைப்பொருளை கைப்பற்றிய காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் போதைப்பொருள் பயன்பாடு என்பது கடுமையாக இளைஞர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், போதைப் பொருளை கட்டுப்படுத்த தனிப்பிரிவு காவல் துறையினர் தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வப்போது போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது செய்யப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. 

போதைப்பொருள் கடத்தல்

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவினர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பகுதியில் இருந்து போதைப் பொருள் ஒன்றை கடத்தி வரும் வாகனம் வருவதாக தகவல் அறிந்துள்ளனர். இதனையடுத்து, கோட்டா பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு இருந்த நிலையில், போதை பொருளை கடத்தி வந்த கும்பலின் கார் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளது. 

இதையும் படிங்க: கள்ளகாதலியுடன் காரில் டூயட் பாடிய கணவன்; நேரில் வந்து தர்ம அடி கொடுத்த மனைவி..!

911 கிலோ பறிமுதல்

திரைப்பட பாணியில் நடந்த இந்த சம்பவத்தில், காவல்துறையினரின் வாகனங்கள் இடித்து தள்ளப்பட்டு கும்பல் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்தனர். இரண்டு பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து 911 கிலோ அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் பதவி வகிப்பு காணொளி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த 7ம் வகுப்பு மாணவர்; பதறவைக்கும் சம்பவம்.. உண்மையை மறைக்கும் பள்ளி நிர்வாகம்?