மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொலையாளியை கைது செய்ய உதவிய "ஈ"... துப்பு கிடைத்தது எப்படி?.. பரபரப்பு தகவல்.!
கொலையின் மர்மத்தை தீர்க்க ஈக்கள் உதவிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
ஆதாரமில்லாமல் இருந்த 19 வயது இளைஞரின் கொலை வழக்கில், குற்றவாளி முதலில் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட நிலையில், இறுதியில் ஈக்கள் கொடுத்த துப்பு மூலமாக கொலை சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: கணவரின் முதல் மனைவிக்கு 50 முறை சதக்., சதக்... துள்ளத்துடிக்க கதறி உயிரிழந்த இளம்பெண்.. பதறவைக்கும் கொடூரம்.!
26 வயது நபர் கொலை
மத்திய பிரதேசம் மாநிலத்தில் வசித்து வரும் 26 வயது இளைஞர் ஒருவர் சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட நிலையில், அவரை கொலை செய்ததாக 19 வயது இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். எனினும், இளைஞருக்கு ஆதாரமாக காவல்துறையினரிடம் ஆதாரங்கள் இல்லாததால் அவர் கண்காணிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்
காவல்துறையினர் விசாரணை
கடந்த அக்.30 இரவில் மனோஜ் தாக்கூர் என்ற 26 வயது நபர், தனது மருமகன் முறை உறவு கொண்ட தரம் சிங் (வயது 19) என்பவருடன் மதுபானம் அருந்த சென்றுள்ளான். பின் தாகூர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் ஜபல்பூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தனர். அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மறுநாளில் தாகூரின் உடல் வயல்வெளியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
ஈக்களால் அம்பலமான உண்மை
இறுதியாக அவர் சிங்குடன் காணப்படாததாக தெரியவந்தாலும், அதிகாரிகள் விசாரித்தபோது எந்த முன்னேற்றமும் இல்லை. ஆதாரங்கள் சிங்குக்கு எதிராக கிடைக்கவில்லை. பின் அதிகாரிகள் தனிப்படை அமைத்து விசாரணையை துரிதப்படுத்திய நிலையில், ஈக்கள் சிங்கை சுற்றி எப்போதும் இருந்தது. அவர்கள் ஈக்களை விரட்ட முற்பட்டாலும் பலன் இல்லை. இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் உண்டாகி, அவர் அணிந்திருந்த சட்டையை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
போதை தகராறு கொலை
அதனை சோதனை செய்தபோது, வேறொரு நபரின் இரத்த தடயம் கண்டறியப்பட்டது. பின் விசாரணையில் சிங்கும் தனது மாமாவை நானே கொண்டேன் என ஒப்புக்கொண்டார். ஆதாவது மதுபானம் அருந்த உணவு, குளிர்பானம் ஆகியவற்றுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு, தாகூர் சிங்கை அடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சிங் தாகூரை தாக்கியதில் கொலை சம்பவம் நடந்துள்ளது அம்பலமானது.
விசாரணையை தொடர்ந்து தரம் சிங்கை கைது செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குப்புற கிடந்த இளைஞர்கள்., ஏறி மிதித்து ஓடிய பசுக்கள்., காரணம் என்ன?..!