மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயங்கரம்... ஏசி வெடித்து 2 டெக்னீசியன்கள் பரிதாப பலி.... காவல்துறை விசாரணை.!
தெலுங்கானா மாநிலம் நலகொண்டாவில் ஏசி வெடித்ததில் இரண்டு டெக்னீசியன்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தெலுங்கானா மாவட்டம் நலகுண்டாவில் அமைந்துள்ள பழ குடோனில் ஏசி பழுதாகியதால் அதனை சரி செய்வதற்காக ஏசி டெக்னீசியன்களான சேக் சலீம் மற்றும் சஜித் ஆகிய இருவர் சென்று இருக்கின்றனர்.
அவர்கள் ஏசி மிஷினை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏசி மிஷின் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஷேக் சலீம் மற்றும் சஜித் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஏசி வெடிக்கும் போது அருகில் இருந்த உதவியாளர்கள் ஓடியதால் அவர்கள் உயிர்ப்புளித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த ஷேக்சளி மற்றும் சஜித் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரயோத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.