#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திமுக எம்.எல்.ஏ-வின் உதவியாளர் விபத்தில் மரணம்; டூ-வீலரில் நிலைதடுமாறி விழுந்து சோகம்.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திப்பிராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ் (வயது 30). இவர் கும்பகோணம் திமுக எம்.எல்.ஏ அன்பழகனிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
நிலைதடுமாறி விழுந்து சோகம்
நேற்று இரவு நேரத்தில் பிரகாஷ் தனது இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூர் நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தார். அச்சமயம், பள்ளியஹ்ரகாரம் பகுதியில், அவர் தனது வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்தார்.
இதையும் படிங்க: அடையாளம் தெரியாத வாகனம் மோதி சோகம்; இளைஞர் பரிதாப பலி.!
விபத்தில் பலி
இந்த சம்பவத்தில் சிமெண்ட் தடுப்பின் மீது மோதியதில், அவர் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: அருப்புக்கோட்டை: கார் - டூவீலர் மோதி பயங்கர விபத்து; எலக்ட்ரீசியன் பரிதாப பலி.!