அண்ணியுடன் ஓரினசேர்க்கை காதல்; திருமணம் செய்ய அடம்பிடித்து பகீர் சம்பவம்.!



in Uttar Pradesh Unnao Same Sex Marriage 

6 மாதங்களுக்கு முன்பு அண்ணி உறவுமுறை கொண்ட பெண்ணுடன் பழகிய இளம்பெண், அவருடன் காதல் வயப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டம், பெஹாடா முஜாவர் கிராமத்தில் திருமணமான பெண்மணி தனது கணவருடன் வசித்து வருகிறார். இதே கிராமத்தில் இளம்பெண் ஒருவர் இருக்கிறார். திருமணமான பெண்ணும், இளம்பெண்ணும் அண்ணி உறவு முறை கொண்டவர்கள் ஆவார்கள். 

தன்பாலின ஈர்ப்பு

இதனிடையே, இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அதாவது, இருவரும் ஒரேபாலின ஈர்ப்பு காதல் வயப்பட்டு இருக்கின்றனர். இந்த விஷயம் இருதரப்பு குடும்பத்தினருக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் காதல் ஜோடியின் செயல்பாடுகளை கண்டித்துள்ளனர்.

இதையும் படிங்க: 40 வயதில் கல்யாணம்.. மணமகனுக்கு அதிர்ச்சி கொடுத்த மணமகள்..! குமுறலில் மாப்பிள்ளை.!

Uttar pradesh

கொலை செய்ய முயற்சி

இதனால் காதல் ஜோடி சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிவிடவே, அவர்களை மீட்டு பெற்றோர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது, இளம்பெண், அண்ணியுடன் தான் வாழுவேன் என அடம்பிடித்துள்ளார். ஒருகட்டத்தில் திருமணமான பெண்ணின் உறவினர்கள், இளம்பெண்ணுக்கு விஷம் கொடுத்த கொலை செய்ய முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்களின் காதல் விவகாரம், உள்ளூரில் வினோத பிரச்சனையாகவும் பேசுபொருளாகி இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதையும் படிங்க: கள்ளக்காதலிக்காக கர்ப்பிணி மனைவியை பலிகொடுத்த கணவன்.. திருமணம் முடிந்தும் தொடர்ந்த காதல்..!