53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
நகை, பணத்திற்காக அம்மா-மகன் அடித்துக்கொலை; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியில் தாய், மகன் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும், வீட்டில் இருந்த இவர்கள் இருவரையும் கொலை செய்து, பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
தாய் - மகன் கொடூர கொலை:
மறுநாள் இவர்கள் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது விபரீதம் புரிந்துள்ளது. பின் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தாய்-மகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது.