திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
7 பேர் கும்பலால் சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; மயக்க மருந்து கொடுத்து கடத்தி நடந்த சோகம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, தாகூர்கனிச் பகுதியை சேர்ந்த பதின்ம வயது சிறுமி, சம்பவத்தன்று 7 பேர் கும்பலால் மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்டு இருக்கிறார்.
மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல்:
சிறுமிக்கு குடிக்க பானம் ஒன்றை கொடுத்தவர்கள், சிறுமி அதனைக்குடித்து மயங்கியதும் அங்கிருந்து கடத்திச்சென்றுள்ளனர். மே 03ம் தேதி சிறுமி கடத்தப்பட்ட நிலையில், 7 பேர் கும்பல் அவரை சீரழித்து இருக்கிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியை கயவர்கள் பின் நடுரோட்டில் விட்டுச்செல்ல, வீட்டிற்கு திரும்பிய சிறுமி தனது தாயிடம் நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார்.
7 பேர் கும்பலுக்கு வலைவீச்சு:
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஹிமான்சு, சாஹில், சமீர், வாஹித், அணில் உட்பட 7 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மேற்கூறிய குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் அதிகாரிகள் களமிறங்கி இருக்கின்றனர்.