நாங்க சந்நியாசம் போறோம் - கும்பமேளாவில் துறவறம் ஏற்ற 7000 பெண்கள்.!



in-uttar-pradesh-prayagraj-maha-kumbh-mela

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ரயக்ராஜ் நகரில் நடைபெற்ற கும்பமேளாவில், கங்கை, யமுனை உட்பட புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், தற்போது வரை 43 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி இறைவழிபாட்டை மேற்கொண்டு இருந்தனர். 

இலட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்

கடந்த ஜன.13 அன்று தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்வு, பிப்ரவரி மாதம் 26 வரை நடைபெறுகிறது. கும்பமேளாவுக்கு இந்தியாவின் வெவ்வேறு பகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கில் பக்தர்கள் தினமும் வந்தவண்ணம் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: "ஜாலியா இருக்கும் போதே., காலி பண்ணிட்டேன்" கள்ளக்காதலி பகீர் வாக்குமூலம்.! போலீசையே அதிர வைத்த சம்பவம்.!

Uttar pradesh

7000 பேர் துறவறம்

இதனிடையே, கும்பமேளா நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் துறவறம் ஏற்றுக்கொண்டதும் தெரியவந்துள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி 7000 க்கும் அதிகமான பெண்கள், திரிவேணி சங்கமத்தில் நீராடி, சந்நியாச தீடீஸை எடுத்துள்ளனர். இவர்களில் பெரும்பாலனோர் உயர்கல்வி பயின்று முடித்தவர்கள் ஆவார்கள்.

இதையும் படிங்க: பூச்சிக்கொல்லி தெளித்து, கைகளை கழுவாமல் உணவு சாப்பிட்டவர் மரணம்; 27 வயது இளம் விவசாயி பரிதாப பலி.!