தன்னை விட மூத்த பெண்ணுடன் தகாத உறவு; கண்டித்த தந்தையை அடித்து... வீடியோ காலில் காதலிக்கு காட்டிய மகன்..!



Inappropriate relationship with the older woman than herself; Beat the father ...

தன்னைவிட வயது அதிகமான பெண்ணுடன் உறவில் இருந்ததை, கண்டித்த தந்தையை கட்டையால் அடித்து, வீடியோ காலில் காதலிக்கு காண்பித்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் வசிப்பவர் டெல்லி பாபு. இவர் ஹொம்கார்டாக வேலை செய்து வருகிறார். அவரது மகன் 21 வயதான பரத். இவர் ஜான்சி என்ற 39 வயதுடைய பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதை அறிந்த பரத்தின் தந்தை டெல்லி பாபு, பரத்தை கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து டெல்லி பாபு தனது மகன், வயது அதிகமான பெண்ணுடன் தொடர்பில் இருப்பது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். எனவே பரத்தை அழைத்து காவல்துறையினர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் பரத் ஜான்சியுடன் தொடர்ந்து உறவிலிருந்து வந்தார் இதனால் நமக்கும் அவருடைய தந்தைக்கும் பிரச்சினை ஏற்பட்டது தனது சந்தோஷத்திற்கு தடையாக இருந்த தந்தையை கட்டையால் கடுமையாக தாக்கி அதை செல்போனில் வீடியோ கால் மூலம் ஜான்சிக்கு காண்பித்துள்ளார்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் டெல்லி பாபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து டில்லி பாபு சித்தூர் டவுன் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பரத்தை கைது செய்தனர். மேலும் இது குறித்து ஜான்சியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சித்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.