காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து அதிகரிக்கும் சிமெண்ட் மூட்டையின் விலை... வருத்தத்தில் மக்கள்!!
இன்று நாட்டில் விவசாயம் குறைந்து விவசாய நிலங்கள் பெரும்பாலும் மனைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் திரும்பும் இடம் எங்கு பார்த்தாலும் ஒரே கட்டிடங்களாகவே காட்சியளிக்கின்றன.
இதனால் நாட்டில் கட்டுமான தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது. பெரிய பெரிய அப்பார்ட்மெண்ட், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் என கட்டுமான தொழிலுக்கு ஓய்வு என்பதே இல்லாமல் இருந்து வருகிறது. அதன் காரணமாக தற்போது சிமெண்ட் விலையும் கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியா முழுவதும் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ. 20 முதல் ரூ. 25 வரை உயர்ந்துள்ளது. இது குறித்து ராம்கோ நிறுவனம் இவ்வாறு கூறியுள்ளது பெட்ரோல் விலை உயர்வு, கொரோனா ஊரடங்கு போன்றவை சிமெண்ட் விலை உயர காரணம் என விளக்கமளித்துள்ளது.