ஒருத்தனுக்கு ஒருத்தினு சொல்றாங்க, எய்ட்ஸில் ஏன் முன்னணி இடம்? இயக்குனர் டிஜே ஞானவேல்.!
தாயகம் திரும்பிய அபிநந்தன்; மக்களின் உணர்ச்சி பொங்கும் உற்சாக வரவேற்பு.!

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் போர் விமானங்களை துரத்தி அடித்து விரட்டிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் துரதிஷ்டவசமாக பாகிஸ்தானில் தரை இறங்கி விட்டார். உடனடியாக பாகிஸ்தான் ராணுவம் அவரை கைது செய்தது.
அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ திட்டங்களை உளவு பார்ப்பதற்கோ அல்லது வேறு ஏதும் நாசவேலைகளை செய்வதற்காகவோ அந்த நாட்டுக்கு செல்லவில்லை என்பது அனைத்து உலக நாடுகளுக்கும் தெரியவந்தது. தன் நாட்டை தாக்கவந்தவர்களை எதிர்த்தே அவர் சென்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
Visuals from Attari-Wagah border; Wing Commander #AbhinandanVarthaman to be received by a team of Indian Air Force. pic.twitter.com/C4wv14AEAd
— ANI (@ANI) March 1, 2019
எனவே அபிநந்தனை எந்தவித நிபந்தனையுமின்றி பாதுகாப்பாக விடுவிக்க வேண்டுமென உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தன. ஐநா சபையில் இருந்தும் பாகிஸ்தானுக்கு நெருக்கடிகள் வரத்துவங்கின. இதனைத் தொடா்ந்து அபிநந்தன் வெள்ளிக் கிழமை விடுவிக்கப்படுவாா் என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தாா்.
அதன்படி இன்று பாகிஸ்தானின் லாகூா் வரை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அபிநந்தன், லாகூரில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதிக்கு காா் மூலம் அழைத்து வரப்பட்டாா். இருநாட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடா்ந்து அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டாா்.
இந்தியா வந்த அபிநந்தனுக்கு பஞ்சாப் முதல்வா் அம்ரிந்தா் சிங் உள்பட வாகா எல்லையில் குவிந்திருந்த பொது மக்கள் உணா்ச்சிப் பொங்க ஆரவார வரவேற்பு அளித்தனா்.