#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாமா அக்கா நல்லா இருக்காங்களா...கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவின் மாப்பிளையை அன்போடு நலம் விசாரித்த இந்திய மச்சான்ஸ், வைரல் வீடியோ .!
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக்கை, கிரிக்கெட் மைதானத்தில் இந்திய ரசிகர்கள் ‘மாமா’ என்று உரிமையுடன் அழைத்த வீடியோ சமூகவலைத் தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்த போது சோயிப் மாலிக் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, இந்திய ரசிகர்கள் பலர் சோயிப் மாலிக்கை மாமா, மாமா என்று உரிமையோடு அழைத்துள்ளனர். மேலும் ரசிகர்கள், ஜிஜூ, ஜிஜூ இங்க பாருங்க, வீட்டில் அக்கா நலமா? என்று நலம் விசாரிக்கிறார்கள். ஜிஜூ என்றால் அக்காவின் கணவர். அதற்கு சோயிப் மாலிக் திரும்பி ரசிகர்களைப் பார்த்து கை அசைத்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.