மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி#: இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 2000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு!
இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு 9 மணி வரை இந்தியாவில் புதிதாக 2154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் இந்தியாவில் இதுவரை 3,72,123 பேரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் 3,54,969 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் 18, இரவு 9 மணி வரை இந்தியாவில் மொத்தம் 16,365 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகியுள்ளது.
இதில் ஏப்ரல் 18, திங்கட்கிழமை மட்டும் பரிசோதனை செய்யப்பட்ட 35,494 மாதிரிகளில் 2154 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 2000க்கும் மேலான பாதிப்பு உறுதியாகியுள்ளது இப்போது தான்.