21 ஆண்டுகளுக்குப் பின் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி! யார் இவர் தெரியுமா??



india-girl-won-miss-universe-award

சுமார் 21 ஆண்டுக்கு பின் இந்திய பெண் ஒருவர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

2020 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி இஸ்ரோல் எய்லாட் நகரில் நடைபெற்றுள்ளது. இந்த அழகிப்போட்டியில் 80 நாடுகளைச் சேர்ந்த 80 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதன் இறுதிபோட்டியில் 
இந்திய அழகியான ஹர்னாஸ் சந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை  வென்றுள்ளார்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பெண் இந்த பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன் இந்தியாவைச் சேர்ந்த 1994 இல் சுஷ்மிதா சென் மற்றும் 2000ல் லாரா தத்தா ஆகிய இருவர் மட்டுமே பட்டத்தை வென்றுள்ளனர். இந்நிலையில் தற்போது பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்துவிற்கு 
2020ம் ஆண்டு மின் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெசா மகுடம் சூடியுள்ளார்.

Harnaaz sandhu

மேலும் இந்த அழகிபோட்டியின் இரண்டாவது இடத்தை மிஸ் பராகுவே நதியா ஃபெரீரா மற்றும் மூன்றாவது இடத்தை மிஸ் தென் ஆப்பிரிக்கா லலேலா மஸ்வானே  ஆகியோர் பிடித்துள்ளனர். ஹர்னாஸ் சந்து சண்டிகர் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது 23 வயதாகும் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மிஸ் சண்டிகர் பட்டத்தை வென்றுள்ளார். மேலும் இவர் சில பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.