நிலவில் நடைபயணம் தொடங்கிய இந்தியா! இஸ்ரோ அறிவிப்பு!!



India took a walk on the moon - ISRO

ந்திராயன் 3 உறுதியாக இம்முறை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு, நேற்று வெற்றியும் அடைந்துள்ளது. இதனால் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடாக இந்தியா விளங்குகிறது.

விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் அதற்கான ஆராய்ச்சி பணிகளை தொடங்கி விட்டதாக இஸ்ரோ சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

ஒரு மாத பயணத்திற்கு பிறகு நேற்று  வெற்றிகரமாக நிலவில் தலையிறங்கிய சந்திராயன் 3 விண்கலத்திலிருந்து வெளியே வந்த ரோவர் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, அடுத்த 14 நாட்கள் தென் துருவத்தில் இருக்கும் வெப்பநிலை, மண்ணின் தன்மை, நில அதிர்வுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.