என்னத்தான் தவறுதலாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? மின்கட்டணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நபர்.!



india/farmer-gets-electricity-bill-of-over-rs-3-crore-for-2-months

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டம் கிங்லா கிராமத்தைச் சேர்ந்தவர் பெமரம் படேல். இவர் தனது இடத்தில் கடை ஒன்றை கட்டி அதனை வாடகைக்கு விட்டுள்ளார். அக்கடையை வாடகைக்கு எடுத்த நபர் அதில் வாகனங்களை பழுது பார்க்கும் தொழில் வைத்து நடத்தி வந்துள்ளார். 

இந்நிலையில் அக்கடைக்கான மின்கட்டணம் வந்துள்ளது. அக்கட்டணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் அந்த பில்லை கடை உரிமையாளரான பெமரம் படேலிடம் காண்பித்துள்ளார். அதனை பார்த்து அவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

Current bill

காரணம் அக்கடைக்கான மாத மின்கட்டணம் 3.71 கோடி ரூபாய் என வந்துள்ளது. அதனையடுத்து பெமரம் படேல் அந்த ரசீதுடன் மாநில அரசின் மின் நிர்வாக மையத்திற்குச் சென்றார். அப்போது கணக்கீட்டாளரின் தவறால் இதுபோல் நடந்துள்ளதாகக் கூறிய அதிகாரிகள், சரியான மின் பயன்பாட்டினை கணக்கிட்டு ரூ.6,414 செலுத்தும்படி கூறியுள்ளனர்.