மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய விமானப்படையில் வேலை; நாட்டுக்கு சேவையாற்ற அரிய வாய்ப்பு.!
இந்திய விமானப் படையில் பயிற்சியுடன் கூடிய கமிஷன்டு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அஃப்கேட் (AFCAT 2/2019) தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அஃப்கேட் (AFCAT), என்சிசி (NCC) வீரர்களுக்கான சிறப்பு நுழைவு மற்றும் மிடியோரோலாஜி (Meteorology) போன்ற நுழைவுகள் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இந்த பயிற்சியுடன் கூடிய வேலைக்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஃபிளையிங் பிரிவு பணி, கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல்) பிரிவு பணி, கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல் அல்லாத) பிரிவு பணி ஆகிய பிரிவுகளில் 242 காலியிடங்கள் உள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 01.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2019
உத்தேசமான தேர்வு நடைபெறும் தேதி: 24.08.2019 / 25.08.2019
பயிற்சி தொடங்கும் காலம்: ஜூலை -2020 முதல் வாரம்.
கல்வித்தகுதி:
கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல் அல்லாத) பிரிவு, ஃபிளையிங் பிரிவு பணிக்கு: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது 4 வருட பி.இ / பி.டெக் பட்டப்படிப்பு. 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல்) பிரிவு பணிக்கு, 4 வருட பி.இ / பி.டெக் பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
விண்ணப்பிக்கும் முறை:
http://careerairforce.nic.in/ அல்லது https://afcat.cdac.in/afcatreg/signup ஆகிய இணைதளங்களில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணம் ரூ.250 ஆகும்.
இரு நிலைகளில் தேர்வு நடைபெறும். தவிர உடற்தகுதி தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு, அஃப்கேட் தேர்வு, நேர்காணல் போன்ற தேர்வுகளுக்குப் பின் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வானவர்கள் 74 வாரங்கள் பயற்சி பெறுவர். பின் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
மேலும், இது குறித்த தகவல்களை பெற, http://careerairforce.nic.in/tview3.asp?link_temp_id=550&lid=238 - என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.