பாகிஸ்தான் ராணுவத்தின் வெறிச்செயலால் இந்திய வீரருக்கு ஏற்பட்ட கொடுமை!!



indian-bsf-soldier-dead-pakistan-troops-near-kashmir

துபாயில் இந்தியா-பாகிஸ்தானுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர் அதனை தொடர்ந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

tamilspark

எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் நரேந்திர குமார் என்பவர்தான், சூரியன் மறைந்த பின்னர், இந்திய வீரர்கள், தேடும் பணியில் ஈடுபட்ட போது, ராம்கார்க் செக்டார் பகுதியில், இரு நாட்டு எல்லையில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலி அருகே நரேந்திர குமாரின் உடல் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் உடலில் சுமார் 3 இடங்களில் புல்லட் துளைத்த காயங்கள் உள்ளன. 

இந்திய அரசு வெளியுறவு அமைச்சகம், ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இந்த விவகாரத்தை, பாகிஸ்தான் தரப்பிடம் எடுத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவம், இருநாட்டு எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் பாகிஸ்தான் ராணுவம் எப்பொழுதுமே கவனம் செலுத்திவருகிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையே ஆசிய கோப்பையில் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறும் நிலையில், இந்த படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் நடுவே வருங்காலங்களில் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வந்துவிடக் கூடாது என்பது இதன் நோக்கமாக இருக்கலாம் என்று உளவுத்துறை சந்தேகிக்கிறது.

tamilspark