திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவுக்கு மாரடைப்பு : மருத்துவமனையில் அனுமதி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரரான கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிகசிறந்த வீரர்களில் ஒருவராக இருந்தவர் கபில்தேவ். இவரது தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.
இவர் 1994 ஆம் ஆண்டு அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது 61 வயதாகவும் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட தலைசிறந்த வீரர்களில் ஒருவரான இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.