தமிழ்நாட்டில் கோடையின் வெப்பம் எப்படி இருக்கும்? - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Indian IMD Announce Summer Season Heat Wave Tamilnadu Less

இந்திய வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் ஏற்படும் வெயிலின் தாக்கம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடும். இந்த வருடத்திற்கான அறிவிப்பில் தமிழ்நாட்டில் கோடை வெப்பம் குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில், "மார்ச் மாதத்தில் இருந்தே இந்தியாவில் வெயிலின் தாக்கம் தொடங்கும். சில நாட்களில் பனி குறைந்து, வெயில் தாக்கம் மக்களால் உணரப்படும். வடமாநிலங்களில் நடப்பு வருடத்தில் அதிகளவு வெயில் பதிவாகும். 

தமிழகம் உள்ளிட்ட என்மாவட்டத்தில் வெயிலின் அளவு வழக்கத்தைவிட குறைவாக பதிவாகலாம். சென்னை உட்பட கிழக்கு கடற்கரை பகுதியிலும் வெயில் குறைவாக இருக்கும். பகலில் வெப்பம் குறைவாக இருப்பதால், இரவிலும் வெப்பம் குறைந்தளவே உணரப்படும். 

India

இராஜஸ்தான், குஜராத், டெல்லி போன்ற மாநிலத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை அதிக வெப்பம் பதிவாகலாம். ஜம்மு காஷ்மீர், லடாக், இமயமலை, மத்திய பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலத்தில் கோடையின் வெப்பம் அதிகளவு இருக்கும். 

பஞ்சாப், ஹரியானா, உ.பி மாநிலத்தில் தமிழகத்தை போல வெப்பம் குறைவாக இருக்கும். கோடையின் வெப்பத்தை பொறுத்த வரையில் அது ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் அதிகளவு இருக்கலாம். இது ஜூன் மாதம் 3 ஆம் வாரம் வரை தொடரலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.