#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விபத்தான விமானத்தை ஒட்டியது இந்தியாவை சேர்ந்த விமானியா? அதிரவைக்கும் செய்திகள்!
இதற்கு முன்னாடி MH370 விமானம் என்ன ஆனது என்ற மர்மங்கள் விளங்காத நிலையில் இன்று இந்தோனேசிய விமானம் ஓன்று விபத்துக்குள்ளானது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தோனேசியாவில் செயல்பட்டு வரும், போயிங் 737 மேக்ஸ் 8 வகையை சேர்ந்த லையன் ஏர் பயணிகள் விமானம், 189 பேருடன், தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கல் பினாங் தீவு நோக்கி புறப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட 13 நிமிடங்களில் விமானத்திற்கு, கட்டுப்பாடு அறைக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விமானம் என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியவில்லை. சிறிதுநேரம் கழித்து விமானம் விபத்துக்குளானதாகவும், அதன் பாகங்கள் கடலில் மிதப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
விபத்திற்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் விமானத்தை ஒட்டியது இந்தியாவை சேர்ந்த விமானி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஒரு சிறுவன், 2 கைக்குழந்தைகள் உட்பட 181 பயணிகள் மற்றும் 8 விமான பணியாளர்களுடன் புறப்பட்ட விமானம் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட மீட்பு படையினர், விமானம் கடலில் மூழ்கியிருந்ததை கண்டறிந்தனர்.
இந்த நிலையில் விமானத்தை ஓட்டிச்சென்ற இரு விமானிகளின் ஒருவர், டெல்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்த பாவ்யே சுனேஜா (31) என்பது தெரியவந்துள்ளது. 2011-ம் ஆண்டு லயன் ஏர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சுனேஜா, விரைவில் இந்தியாவிற்கு திரும்ப இருந்ததாகவும், வேறு ஒரு விமான நிறுவனத்தில் பணிக்கு சேர இருந்ததாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.