தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்த சில முக்கிய வேண்டுகோள்கள்..!
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. தற்போது இந்நோய் இந்தியாவிலும் மிக விரைவாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.
இருப்பினும் வைரஸின் தாக்கம் குறைந்த பாடில்லை. அதனால் இன்று நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி ஊரடங்கை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி அவர்கள் சில முக்கிய வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.
அதன்படி மக்கள் வெளியில் வரும் போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். மருத்துவர்கள் , செவிலியர்கள் , காவல் துறையினரின் சேவைகளுக்கு மதிப்பு கொடுங்கள். ஏழை , எளிய மக்களுக்கு உதவுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் வீட்டிலுள்ள முதியோர்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும்.சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.கொரோனாவை கண்டறியும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் என்று சில முக்கிய வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.