இரயில் பயணிகளுக்கு விதிமுறைகளை அறிவித்த இரயில்வே : இனி இதை செய்தால் அவ்வுளவுதான்.!



Indian Railway Announce Passenger Rules and Regulation

தூரந்திர பயணிகளுக்கு பலராலும் விரும்பப்படும் போக்குவரத்து இரயில் போக்குவரத்து. அமைதியான பயணம், கழைப்பின்மை, பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்களால் இவை முக்கியத்துவம் பெறுகிறது. இரவு நேரங்களில் இரயிலில் பயணம் செய்யும் மக்களுக்கு இடையூறு என்பது சில இடங்களில் இருகிறது. இதற்காக இரயில்வே விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி, இரவில் இரயிலில் பயணிக்கும் பயணி செல்போனில் சத்தமாக பேசுதல், உரத்த குரலில் பாடலை கேட்டல் கூடாது. இரவு விளக்குகளை தவிர்த்து பிற விளக்குகளை அணைக்க வேண்டும். சக பயணிகளின் உறக்கம் கெடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்த புகார் வரும் பட்சத்தில் இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். 

train

இரயிலில் பணியாற்றும் சோதனை ஊழியர்கள், பாதுகாப்பு படையினர், மின்சாதன பராமரிப்பாளர்கள், உணவு வழங்கும் பணியாளர்கள் இரவில் தங்களின் பணியை அமைதியாக செய்ய வேண்டும். முதியோர், மாற்றுத்திறனாளிகள் தனியே பயணம் செய்தால் அவர்களுக்கு தேவையான உதவியை பணியாளர்கள் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.